வரி செலுத்துவோர் அடையாள எண் தொடர்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

keerthi
0

 


வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN Number) கட்டாயமாக்குவது ஏப்ரல் வரை தாமதமாகும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெப்ரவரி மாத இறுதிக்குள் அடையாள எண் பெப்ரவரி இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று முன்பு முடிவு செய்யப்பட்டிருந்தது.

எனினும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திலோ அல்லது பிரதேச செயலகத்திலோ அல்லது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அடுத்த மாத இறுதிக்குள் இலக்கங்களை வழங்கி முடிக்க முடியாததால் ஏப்ரல் மாதம் வரை தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலகங்களில் கவுண்டர்கள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், புதிய பயனாளிகளுக்கு அஸ்வெசும நலத்திட்ட உதவிகள் வழங்குதல், விண்ணப்பங்கள் கோருதல் போன்ற பணிகள் இடம்பெற்று வருகின்றது.

எனினும் அதற்கு வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆதரவைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top