இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை கடந்த செவ்வாய்க்கிழமை (16) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவும் பங்கேற்றிருந்தார்.
இந்தச் சந்திப்பில் புதிய உயர்ஸ்தானிகருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த சபாநாயகர், இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்தார். இலங்கை இக்கட்டான சூழலை எதிர்கொண்டிருந்தபோது இந்தியா வழங்கிய அனைத்துவிதமான உதவிகள் குறித்து நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.