இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியாயில் இன்று (09) உள்ளூர் நேரப்படிஅதிகாலை 2.18 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
அண்மைக்காலமாக நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்டவை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சீனா மற்றும் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாயின.
ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆப்கானிஸ்தானிலும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. இதேபோன்று, இவின் வடகடலோரப் பகுதியில் இன்று அதிகாலை3.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.5 ஆக பதிவாகி இருந்தது.
இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் அந்நாட்டில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மக்களைப் பாதுகாப்பாக இருக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.