தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான
ரகுல் பிரீத் சிங் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘தடையற தாக்க’ ’என்னமோ ஏதோ’ ’தீரன் அதிகாரம் ஒன்று’ ’தேவ்’ ’என்ஜிகே’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் ஏராளமான தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தமிழில் ’அயலான்’ மற்றும் ’இந்தியன் 2’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் இரண்டும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.இந்த நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங், கடந்த சில ஆண்டுகளாக பிரபல தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இவர்களது திருமணம் கோவாவில் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி ஏராளமான இந்தி திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பதும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ’மோகினி’ என்ற தமிழ் திரைப்படத்தில் அவர் த்ரிஷாவுடன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.