உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் வெளியான சம்பவம் : விசேட விசாரணைக் குழு நியமனம்

keerthi
0

 


கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் பகுதி வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக வௌியான சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக பரீட்சைகள் திணைக்களத்தால் விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு     இந்த குழுவில் 5 அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்   சம்பவம் தொடர்பில் அம்பாறையை சேர்ந்த ஆசிரியர் ஒருவரும், மொரட்டுவ பரீட்சை மத்திய நிலையத்தில் கடமையாற்றிய அலுவலக உத்தியோகத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அத்தோடு   கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த உயர்தர விவசாய விஞ்ஞான பாடத்தின் இரு பகுதி வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், குறித்த பரீட்சையை அடுத்த மாதம் முதலாம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top