அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் அயோவா மாநிலத்தில் இடம்பெற்ற முதலாவது வாக்கெடுப்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றியீட்டியுள்ளார்.
கடந்த திங்களன்று இடம்பெற்ற இந்தத் தேர்தலில் ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் அமெரிக்கா தூதுவர் நிக்கி ஹாலி மற்றும் புளோரிடா ஆளுநர் ரொன் டிசன்டிஸை பின்தள்ளி மூன்றாவது முறை குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதில் ட்ரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.இதில் 40 பிரதிநிதிகளில் ட்ரம்ப் குறைந்தது 20 பிரதிநிதிகளை வெற்றுள்ளார். இதில் இரண்டு பிரதிநிதிகளை மாத்திரம் வென்ற இந்திய வம்சாவளியான விவேக் ராமசுவாமி போட்டியில் இருந்து விலகி டிரம்புக்கு ஆதரவை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு கடைசியில் இடம்பெற்றவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் இருக்கும் ட்ரம்ப், நான்கு குற்றவியல் குற்றச்சாட்டு உட்பட பல வழக்குகளை எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.