தாய்வான் ஜனாதிபதி தேர்தலில் சீன எதிர்ப்பு ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட லாய் சிங் தே (Lai Ching-te) வெற்றி பெற்றுள்ளார்.
அவர் 5 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அதேநேரம், 5 மில்லியன் வாக்குகளை தாண்டி பெற்ற முதல் தாய்வான் ஜனாதிபதி என்ற பெருமையையும் லாய் சிங் தே பெற்றுள்ளார்.
இவர் சீனாவை விட அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை விரும்பும் தலைவராக அறியப்படுகிறார்.
லாய் சிங் தே, தாய்வானின் தற்போதைய ஜனாதிபதி சான் இன்-வெனை விட சீன எதிர்ப்பு பிரிவினைவாதி என சீனா கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.