நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெள்ளம் காரணமாக தடைப்பட்டிருந்த கொழும்புக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான தொடருந்து சேவை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றிரவு அஞ்சல் தொடருந்துகள் வழமைப்போன்று இயங்கும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.