புத்தளம் மாவட்ட மக்களோ அல்லது கட்சியோ கேட்டால் மாத்திரமே தனது கணவரின் வெற்றிடத்தை பரிசீலிக்க தான தயாராக இருப்பதாக மறைந்த முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சாமரி பிரியங்கா பெரேரா தெரிவித்துள்ளார்.
அண்மையில் வாகன விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் அனுராதா ஜயக்கொடியின் இல்லத்திற்குச் சென்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"எனது கணவர் புத்தளம் மாவட்டத்திற்கும் நாட்டு மக்களுக்கும் அளப்பரிய சேவை செய்துள்ளார். அவரிடம் உதவி கேட்ட எவரும் வெறுங்கையுடன் திருப்பி அனுப்பப்படவில்லை. அவருக்கு என்ன நடந்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை எனது கணவர் இறப்பதற்கு முன்பே சில ஊடகங்கள் நான் அரசியலுக்கு வருவேன் என அறிவித்தன. இதுபோன்ற செய்திகளை வெளியிடும் போது யாரும் என்னிடம் கேட்கவில்லை.அரசியலுக்கு வருகிறேன் என்று இதுவரை எந்த ஊடகத்திலும் அறிக்கை விடவில்லை. கூறினார்.“எனது கணவரின் அரசியல் விவகாரங்களில் பாதியை நான் நிர்வகித்தாலும், அவரின் தனிப்பட்ட செயலாளராக செயற்பட்டாலும், அரசியலுக்கு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.இன்னும் அந்த நம்பிக்கை இல்லை.ஆனால் புத்தளம் மக்கள், நாட்டு மக்கள் மற்றும் அவர் விட்டுச் சென்ற பதவியை ஏற்று மக்கள் பணியைத் தொடருமாறு கட்சித் தலைமை என்னைக் கேட்டுக் கொண்டது, நான் அதைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கலாம், ”என்று அவர் கூறினார்.