சீன ராணுவத்தில் பல்வேறு பெயர்களில் உளவுக்கப்பல்கள் இயங்கி வருகின்றன. அந்த கப்பல்களை ஆய்வு கப்பல் என சீன அரசு கூறி வந்தாலும் அவை அபாயகரமான உளவு கப்பல்கள் என அமெரிக்க, ஐரோப்பிய பாதுகாப்பு துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தோடு கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவில் இருந்து ஷின்யான் 1,2,3 மற்றும் ஷியாங் யாங் ஹங் 1,3,6,16 உள்ளிட்ட உளவு மற்றும் போர் கப்பல்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு அதி நவீன வசதிகள் கொண்ட சீனாவின் 2 உளவு கப்பல்களுக்கு இலங்கை துறைமுகத்தில் நிறுத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது. இந்த உளவு கப்பல்கள் மூலம் 750 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களை துல்லியமாக கண்காணிக்க முடியும்.