இந்தாண்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான கேப்டன் மில்லர், அயலான் படங்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் வெளியாகி அமோக வரவேற்பினை பெற்று வரும் படம் தான் 'மிஷின்'. பாசிட்டிவ் விமர்சனங்களுடன் இப்படத்திற்கான திரைகள் அதிகரிக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பினை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக இருந்தாலும், நீண்ட காலமாக தனக்கான ஒரு நிலையான இடத்திற்காக போராடி வருபவர் அருண் விஜய். அண்மைக்காலமாக இவரது நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிதான வரவேற்பினை பெறாத நிலையில், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பொங்கல் ரிலீசாக வெளியானது 'மிஷின்'. ஏ.எல். விஜய் இயக்கியிருந்த இப்படத்தில் நிமிஷா சஜயன், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.