பௌத்த மதத்திற்கும் புத்தபெருமானுக்கும் எதிரானவர்கள் எனக் கூறிக் கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தயாராகவிருந்த போதும் சட்டபூர்வமாக்கப்படவில்லை. சுதந்திரம் கிடைத்து எழுபது ஆண்டுகளை கடந்துள்ள போதும் இந்நாட்டில் வடக்கு மற்றும் தெற்கில் எவ்வித ஒற்றுமையும் இல்லை. எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திரமாக வாழ்வதற்கு தேசிய நல்லிணக்கம் மிகவும் அவசியமாகுமென நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
அநுராதபுரம் ஆளக்கமந்த உணவகத்தில் நேற்று முன்தினம் (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சமூக நல்லிணக்கத்திற்கான தேசிய செயற்திட்ட தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பௌத்த மதத்திற்கும் புத்த பெருமானுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படுவது தொடர்பில் தற்போது சமூகத்தில் மிகவும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
இந்த நிலைமையில் தான் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி காலத்தின் போது ஒரு சொற்பொழிவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது . இதன் மூலம் மகாநாயக்க தேரர்களுக்கு ஒழுக்க நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட அதிகாரங்கள் உள்ளன. இதில் சாமானியர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.எதிர்பாராத விதமாக எட்டு வருடங்கள் கடந்துள்ளபோதும் இது சட்டபூர்வமாக்கப்படவில்லை. சில குழுக்களினால் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெறும் சம்பவங்களின் ஊடாக இது சட்டபூர்வமாகப்பட்டிருந்தால் சிறந்தது என பெரும்பாலானேர் யோசிக்கின்றனர்.
அதேபோன்று சுதந்திரம் கிடைத்து எழுபது ஆண்டுகளை கடந்துள்ள போதும் இந்நாட்டில் வடக்கு மற்றும் தெற்கில் எவ்வித ஒற்றுமையும் இல்லை. எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திரமாக வாழ்வதற்கு தேசிய நல்லிணக்கம் மிகவும் அவசியமாகும். அதேபோன்று காலம் சென்ற சோபித்த தேரரின் நீதியான சமூகத்திற்கான தேசிய திட்டம் 2013 ம் ஆண்டு அவரது 70 வது வயதில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்ய நடவடிக்ைக மேற்கொள்ளப்பட்டது. அந்தக் காலத்தில் 18வது திருத்தத்தின் மூலம் நாடு ஆட்சி செய்யப்பட்டது. தனிநபர் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தில் நாம் இன்றும் இருக்கின்றோம் . நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலை குறைக்க நிலையான திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பின்போது நல்லிணக்க செயல் திட்டத்தின் செயலாளர் சுனில் ஜயசேகர உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.