அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான தீர்க்கமான நியூ ஹம்ப்ஷயர் வாக்கெடுப்பில் வெற்றியீட்டிய டொனால்ட் டிரம்ப், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனுடன் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பை நெருங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் டிரம்புடன் தொடர்ந்து போட்டியில் உள்ள நிக்கி ஹேலியை அவர் தோற்கடித்தார். அமெரிக்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதுவரான ஹேலி வேட்பாளர் போட்டியில் தொடர்ந்து நீடிக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அயோவா மாநிலத்தின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் வெற்றியீட்டி இருந்தார்.
எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதோடு அதில் ஜனநாயகக் கட்சி சார்பில் பதவியில் உள்ள ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடவுள்ளார்.