மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் ஒந்தாச்சிமட
ஆற்றுப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
குறித்த இளைஞனும் அவரது தந்தையும் இன்று காலை ஓந்தாச்சிமட ஆற்றில் மீன்பிடித்தனர்.
இதன்போது அவரது தந்தை நீரில் மூழ்கியதையடுத்து அவரை காப்பாற்ற முயன்ற குறித்த இளைஞர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல் போயுள்ள இளைஞர் கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞானப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி பயிலும் 25 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காணாமல்போன குறித்த இளைஞரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படடடு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.