நாடளாவிய ரீதியில் சுகாதார சேவை ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பணிப்புறக்கணிப்புக்கு மத்தியில் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு ஆதரவாக முப்படைகள் அணிதிரட்டப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி
ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வைத்தியரில்லாத ஊழியர்கள் இன்று (16) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக சுகாதார பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.