ஜப்பானின் வடக்கு ஹோக்காய்டோ மாகாணம் சப்பரோ தீவில் உள்ள நியூ சித்தோஸ் விமானநிலையத்தில் இருந்து தென்கொரியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று 289 பயணிகளுடன் புறப்பட தயாரானது.
விமான ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு வானில் எழும்ப முயன்றபோது அங்கே பயணிகள் யாரும் இல்லாமல் நின்று கொண்டிருந்த கேத்தே பசிபிக் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்துடன் மோதியது.
மேலும் இந்த விபத்து காரணமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் தென்கொரிய விமானத்தின் முன்பக்க இறக்கையில் சேதம் அடைந்தது. இதனால் கொரிய விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டு வேறுவிமானம் மூலம் அவர்கள் அனுப்பப்பட்டனர். இதனால் அந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
அத்தோடு அங்கு நிலவிய கடுமையான பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஜப்பானின் சிவில் விமான போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.