விமானத்தில் இருந்து கீழே குதித்த நபர்..!!

tubetamil
0

 கனடாவில் நபர் ஒருவர் விமானத்தில் இருந்து கீழே குதித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


கனடாவின் - டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட எயர் கனடா விமானம் தயாராக இருந்தது.

பயணிகள் அனைவரும் தங்களது இருக்கையில் அமர்ந்தனர்.

அப்போது ஆண் பயணி ஒருவர் தனது இருக்கையில் அமராமல் நின்று கொண்டிருந்தார்.

திடீரென்று அவர் விமானத்தின் கதவை திறந்து கீழே குதித்துள்ளார்.

இந்த நபர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து குதித்ததில் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து குறித்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர் விமானத்தில் இருந்து எதற்காக கீழே குதித்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவத்தால் துபாய்க்குச் செல்லும் விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top