நுவரெலியாவில் வட்ஸ்அப் மூலம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை எதிர்வரும் பெப்ரவரி (02) வரை பொலிஸ்
தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (29) உத்தரவு பிறப்பித்துள்ளது.
முச்சக்கரவண்டி சாரதியான குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை (28) இரவு நுவரெலியா பொலிஸாரால் 05 கிராம் மற்றும் 100 மில்லிகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைத்தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின்போது, குறித்த நபர் வட்ஸ்அப் செயலியின் ஊடாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளதுடன், பொலிஸாரினால் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது பெப்ரவரி (02) வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.