நாகர்கோவில் பகுதியில் கசிப்பு உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டுவந்த ஒருவர் கைது!
பருத்தித்திறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாகர்கோவில் பகுதியில் நீண்டகலமாக கசிப்பு உற்பத்தி விற்பனையில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாகர்கோவில் பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தி விற்பனையில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவர் பொலிஸாரின் கண்களில் இருந்து தப்பி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் பருத்தித்திறை பொலிஸ் நிலைய பொறுப்திகாரி தலமையிலான பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையில் சென்ற பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் குறித்த சந்தேக நபரது வீடு சுற்றிவளைத்து, சந்தேக நபரை கைது செய்ததுடன் கசிப்பு மற்றும் கோட என்பனவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.