முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆன்மீக ஆலோசகரான அனுராதபுரத்தை சேர்ந்த ஞானக்கா கண்டிக்கு வந்த போது, வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அத்தோடு விசேட பிரமுகரை போன்று ஞானக்காவை வரவேற்க விசேட பொலிஸ் பாதுகாப்பு மற்றும் வாகன பேரணி வழங்கி கண்டி பொலிஸ் மா அதிபர்கள் எவ்வாறு செயற்பட்டார்கள் என உள்ளக பொலிஸ் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அவர் நேற்று முன்தினம் கண்டிக்கு வந்து பொலிஸ் பாதுகாப்பில் சென்று பயணம் மேற்கொண்டுள்ளதுடன், அவருக்கு மதிய உணவை அவரது விசுவாசி என கூறப்படும் தியவதன நிலமே தயார் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறுஇருக்கையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் அவர் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தன.
எனினும் அது பொய்யான செய்தி என கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமீல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.