வெற்றிடமான கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கு கிராம உத்தியோகத்தர்களை தெரிவு செய்வதற்கு பரீட்சை திணைக்களத்தினால் பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரகாரம் நேர்முகப்பரீட்சைக்குத் தகுதி பெற்ற 4,232 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பட்டியலானது, இன்று(27) வெளியானதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moha.gov.lk இல் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வு முடிவுகளின்படி 2002 கிராம அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது.
அத்தோடு, வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நேர்முகத் தேர்வுகள் விரைவில் நடத்தப்பட்டு, அரச சேவைக்குள் கொண்டு வரப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.