பொலிவுட் நடிகர் அமீர்கானின் மகளின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த அமீர்கான் நடிப்பில், கடைசியாக லால் சிங் சத்தா திரைப்படம் வெளியாகியிருந்தது.
இந்த படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த வாரம் அமீர்கான் மகள் இரா.கானுக்கு மும்பையில் திருமணம் நடைபெற்றது.
திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதையடுத்து நேற்று உதய்பூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமீர்கானின் குடும்பத்தினர் மற்றும் திரையுலக நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது இரா கான் தனது கணவர் நுபூருக்கு மோதிரம் மாற்றி முத்தமிட்டதை பார்த்த அமீர்கான் நெகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.
இது குறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.