பின்னணி பாடகியும் இளையராஜவின் மகளுமான பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
அவருக்கு வயது 47. கேன்சர் பாதிப்பால் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி கடந்த 6 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.
ராமன் அப்துல்லா புதிய கீதை உள்ளிட்ட படங்களில் பவதாரிணி பாடல்களை பாடியுள்ளார்.
அத்தோடு பாரதி படத்தில் அவர் பாடிய ஒரு பாடலுக்காக தேசிய விருதும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.