களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்..!!

tubetamil
0



 பருத்தித்துறை பகுதியில்  அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பருத்தித்துறை, முனைப்பகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் உபகரண களஞ்சியசாலை ஒன்றிலேயே இன்று அதிகாலை இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதானவரும், அவரது சகோதரருமான 
வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தீவிபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை சம்பவம் நடந்த இடத்திற்கு பருத்தித்துறை நீதவான் வருகைதந்து சம்பவ இடத்தை பார்வையிடுகின்றார். இதேவேளை தடயவியல் பொலிஸாரும் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top