ஜப்பானில் ஆழிப்பேரலை ஏற்படும் என விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையை அந்த நாட்டு வானிலை மையம் தளர்த்தியுள்ளது.
அதேநேரம் ஜப்பானின் கரையோர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஜப்பானிற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.