சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் 170-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு வேட்டையன் என்ற டைட்டிலையும் வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு தற்போது நாகர்கோவில் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், பொங்கல் ஸ்பெஷல் ட்ரீட்டாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான லைக்கா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி கருப்பு கூலிங் கிளாஸ் உடன் துப்பாக்கியும் கையும்மாய் செம மாஸ் லுக்கில் இருக்கிறார்.
இந்த போஸ்டரே வேட்டையன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. விரைவில் வேட்டையன் படப்பிடிப்பை நிறைவு செய்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகிற ஏப்ரல் மாதத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவருடைய 171-வது படத்திலும் நடிக்கவிருக்கிறார்.அதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் கூட்டணியிலும் சூப்பர் ஸ்டார் இணையுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதைத்தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்திலும், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினி தொடர்ந்து படங்களில் நடிக்க உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.தன்னுடைய 73 வயதிலும் எனர்ஜி குறையாமல் சூப்பர் ஸ்டார் ரஜினி, இளம் நடிகருக்கெல்லாம் பயங்கர டஃப் கொடுக்கிறார். அதிலும் வேட்டையன் படத்தில் இவருடைய லுக்கை பார்த்ததும், ‘அடிபொலி! இது வேட்டையினின் பொங்கல்’ என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர்.