விஜய் ஆண்டனி நடிப்பில் செம ஹிட்டடித்த படங்களில் ஒன்று பிச்சைக்காரன். 2016ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
குறைந்த பட்ஜெட்டில் தயாரான இப்படம் நல்ல வசூல் படைத்தது, இப்படம் மூலம் நாயகியாக சாட்னாவும் அறிமுகமானார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை தானாம்.
பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு ஒரு தெலுங்கு மற்றும் தமிழ் படம் நடித்தவர் திருமணம் செய்து செட்டில் ஆனார்.கடந்த 2016ம் ஆண்டு கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டர், இவர் பிச்சைக்காரன் படத்தை விநியோகம் செய்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்தின் போது சாட்னா குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்ப போலீஸில் புகார் எல்லாம் அளிக்கப்பட்டது.பின்னர் எல்லாம் முடிந்து 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் இவர்களது திருமண வரவேற்பு நடைபெற்றது.அண்மையில் சாட்னா தனது மகன் கிரணின் பிறந்தநாளை கொண்டாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக இந்த நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.