தந்தையால் சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை..!

keerthi
0


இரண்டு வருடங்களுக்கு மேலாக தனது தந்தையின் பாலியல் துன்புறுத்தல்களை பொறுத்துக்கொள்ள முடியாத 13 வயது சிறுமி தனியாக காவல் நிலையம் வந்து இது தொடர்பில் முறைப்பாடு செய்ததை அடுத்து தந்தையை கடந்த (28ம் திகதி) கைது செய்ததாக நொச்சியாகம காவல்துறையினர் தெரிவித்தனர்.

நொச்சியாகம காவல்துறை பிரிவைச் சேர்ந்த 34 வயதுடைய கொத்தனார் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி தனது தாய், தந்தை மற்றும் சகோதரருடன் வீட்டில் வசித்து வருகிறார், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2021 ஆம் ஆண்டு), ஆறாம் ஆண்டு படிக்கும் போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பலமுறை வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார் என சிறுமி அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்      இது குறித்து சிறுமி தனது தந்தையின் தாயாரிடம் தெரிவித்ததையடுத்து, தனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், நேற்று முன்தினம் மீண்டும் தனது தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல இருந்த போது, ​​இரகசியமாக காவல் நிலையம் வந்ததாகவும் சிறுமி அளித்த வாக்குமூலங்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் தந்தை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதுடன், சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் நொச்சியாகம காவல் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top