புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர்கள் இருவரை நேற்று (06.01.2024) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு கோம்பாவில் துர்க்கையம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸார் 28 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு 02 ஆம் வட்டாரம் கோம்பாவில், கர்ணன் குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த 18 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.