தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாகவும் பரபரப்பாகவும் வலம் வரும் நடிகராக உருவெடுத்துள்ளார்
எஸ்.ஜெ சூர்யா. இவர் நடித்தாலே அப்படம் பிளாக்பஸ்டர் தான் என ஒரு பேச்சு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இருந்து வருகின்றது. மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.மேலும் கோலிவுட்டின் லக்கி ஸ்டார் என்றும் பெயரெடுத்துள்ளார் எஸ்.ஜெ சூர்யா. சிம்புவின் கம்பேக் படமான மாநாடு, விஷாலின் கம்பேக் படமான மார்க் ஆண்டனி, ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா என அனைத்து படங்களிலும் எஸ்.ஜெ சூர்யா நடித்துள்ளார். எனவே ஒரு ஹீரோ கம்பேக் கொடுக்க நினைத்தால் அவர் எஸ்.ஜெ சூர்யாவுடன் நடித்தால் போதும், அப்படம் வெற்றிபெறும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.இந்நிலையில் எஸ்.ஜெ சூர்யாவை தன் படத்தில் நடிக்க வைக்க பல முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகின்றனர். அந்த வகையில் சமீபகாலமாக வில்லனாகவே நடித்து வரும் எஸ்.ஜெ சூர்யா தற்போது மீண்டும் ஹீரோவாக நடிக்க தயாராகி வருகின்றார். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஒரு படத்தில் எஸ்.ஜெ சூர்யா ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.
சிவகார்திகேயனின் ரெமோ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வெற்றிபெற்ற பாக்யராஜ் கண்ணன் கடைசியாக கார்த்தியின் சுல்தான் படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது எஸ்.ஜெ சூர்யாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி படமாக உருவாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.
சிம்பு, விஷால், ராகவா லாரன்ஸ் என அனைவரின் கம்பேக் படத்திலும் நடித்துள்ள எஸ்.ஜெ சூர்யாவை வைத்து தானும் ஒரு கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இருக்கின்றார். இந்நிலையில் ரெமோ என்ற திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அட்லியின் உதவி இயக்குனரான பாக்யராஜ் கண்ணன் ரெமோ திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக கலர்புல்லாக எடுத்திருந்தார்.அனிருத்தின் இசை, பி,சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவு என மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் தன் முதல் படத்திலேயே பணியாற்றியுள்ளார் பாக்யராஜ் கண்ணன். மேலும் அப்படத்தின் காமெடி காட்சிகள் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்தது. இதையடுத்து மீண்டும் காமெடி ஜானரில் அதுவும் எஸ்.ஜெ சூர்யாவை வைத்து பாக்யராஜ் கண்ணன் படமெடுக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. எனவே இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை பெரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.