மூன்றாம் நபர் வாகன காப்புறுதி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

keerthi
0


 மூன்றாம் நபர் காப்புறுதி கொண்ட வாகனம் மோதி விபத்துக்குள்ளானால் நீதிமன்றத்திற்கு செல்லாமல் அந்த நபருக்கு இழப்பீடு வழங்க போக்குவரத்து அமைச்சகத்துடன் காப்பீட்டு நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.

மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் இந்த விதிமுறைகளை உள்ளடக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மார்ச் முதலாம் திகதிக்குள் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள சுமார் நாற்பது காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக ஐந்து இலட்சம் ரூபாய்க்கு உட்பட்டு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளானவருக்கு இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லாவிட்டால், இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2018ல் 562 பேருக்கும், 2019ல் 653 பேருக்கும், 2020ல் 449 பேருக்கும், 2021ல் 3500 பேருக்கும், 2022ல் 423 பேருக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top