யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள நித்தியவெட்டை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய றாயூ என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு உடன் வருகை தந்து முள்ளியான் கிராமசேவகர் கி.சுபகுமார் சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.