களுத்துறையில் பிரபல ஹோட்டல் ஒன்றின் அறையிலிருந்து அமெரிக்கப் பிரஜை ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
67 வயதான அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ஹோட்டல் நிர்வாகம் களுத்துறைப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் ஹோட்டல் அறையிலிருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் களுத்துறை குற்றத் தடுப்புப் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.