இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானையுடன் ,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன்,500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் திருவிழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்று (08) திருகோணமலையில் இடம்பெற்றது.பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இலங்கை வரலாற்றில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை கிழக்கு ஆளுநர் நடத்தியிருந்ததுடன் இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டை மீட்டெடுத்தமைக்காக உலகம் முழுவதும் இருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவரும் பின்புலத்தில் மற்றுமொரு சிறப்பம்சமாக பொங்கலை வரவேற்கும் “பொங்கல் திருவிழா” மூலம் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பிரமாண்டமான பொங்கல் விழா..!!
January 08, 2024
0
Tags
Share to other apps