13 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் மாமனார் (வயது 47), சந்தேகத்தின் பேரில் வெள்ளிக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாமல்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.