டெங்கு நுளம்பு பரவும் வகையில் வளாகங்களை பராமரித்து வந்த 175க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்தில் மட்டும் 6,500 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.