கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு நாவலடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 21 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
எனினும், குறித்த இளைஞனின் மரணம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் நாவலடி பொது மக்களால் நேற்று (29.01.2024) காத்தான்குடி பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே தனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த நபரின் தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இரண்டு கணவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த பெண் சுமார் 8 மாத காலமாக உயிரிழந்த நபருடனும் மற்றைய கணவரோடும் வாழ்ந்து வந்ததாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் குறித்து சம்பவம் கிராம மக்களுக்கு தெரியவந்ததையடுத்து நாவலடி கிராம மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து குறித்த பெண்ணையும் அவரது கணவரையும் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், பெண்ணின் நடவடிக்கை கிராமத்துக்கு அவ பெயர் வரும் என்ற காரணத்தினால் பெண்ணையும் கணவரையும் அக்கிராமத்தில் இருந்து வெளியேற்றுமாறும் கூறியுள்ளனர்.