இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டுக்கு நேரில் சென்றுள்ளார்.
கொழும்பிலுள்ள சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு சென்று தமது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடலை பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.