தென் கொரியாவை சேர்ந்த முன்னணி பன்னாட்டு மின்னணு நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி நிறுவனம், சாம்சங் (Samsung). இதன் தலைமை அலுவலகம் தென்கொரிய சுவோன் (Suwon) நகரில் உள்ளது.
அத்தோடு கணினிகளில் உபயோகப்படுத்தப்படும் "சிப்" (chip), நவீன தொலைக்காட்சிகள், ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல உயர் தொழில்நுட்ப மின்னணு பொருட்களை இந்தியா உட்பட உலகெங்கும் தயாரித்து விற்பதில் சாம்சங் முன்னணியில் உள்ளது.
சாம்சங் வெளியிட்டுள்ள அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரையிலான காலாண்டு கணக்கில், அதன் லாபம் $2.13 பில்லியன் எனும் அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், 2022ல் இதே காலாண்டு லாபத்துடன் ஒப்பிடும் போது இது 35 சதவீதம் குறைவு என்றும் தெரிவித்துள்ளது.