பாராளுமன்றத்தில் (ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர்) எதிர்வரும் 24ஆம் திகதியன்று நிறைவுக்கு கொண்டுவரப்படவுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்பின்னர், பாராளுமன்றத்தின் புதியக் கூட்டத்தொடரை ஜனாதிபதி பெப்ரவரி 7ஆம் திகதியன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். ஆகையால், இந்தக் கூட்டத்தொடரின் இறுதி பாராளுமன்ற நாட்களாக ஜனவரி 23 மற்றும் 24 ஆம் திகதிகள் இருக்கும்.
அந்த இரண்டு நாட்கள் மட்டுமே பாராளுமன்றம் கூடும், எதிர்வரும் 25ஆம் திகதி பூரணை தினம் என்பதால் இரண்டு நாட்கள் மட்டுமே கூடும்.
பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதால், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோபா) ஆகிய குழுக்கள் உள்ளிட்ட 50 குழுக்களுக்கு மேல் இரத்தாகும் அந்த குழுக்கள் அனைத்தும் மீளவும் நிறுவப்படவேண்டும்.
பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் உயர் உத்தியோகபூர்வ நிலைகள், சிறப்புக் குழுக்கள் மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் மீதான பாராளுமன்றக் குழு மட்டுமே இரத்தாகாது.
கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி பாராளுமன்றம் கடைசியாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் முடிவடைந்தது.