பொலன்னறுவை, வெலிகந்த, கடவடமடுவ பிரதேசத்தில் இன்று (21) மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பின் போது பெண் ஒருவர் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலினால் காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த தாக்குதலை மேற்கொண்ட பெண்ணும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸ் நிலைய கட்டளைத்தளபதி, பொலிஸ் பரிசோதகர் சமந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கடவத்தமடுவ, கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் சட்டவிரோத மதுபானம் விற்பனையில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.