ஹோமாகம கட்டுவன கைத்தொழில் பேட்டைக் கிராமத்தில் உள்ள குளோரின் உற்பத்தி தொழிற்சாலையில் மீண்டும் புகை பரவி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்னரும் இந்த தொழிற்சாலையில்,இரு தடவைகள் புகை வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இங்கு மீண்டும் புகை வெளியாகி வருகிறது.
இது குறித்து தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சூரிய ஒளி சரியாகப் பட்டால் இந்நிலை தவிர்க்கப்படும் எனவும், அதுவரை புகை மூட்டமாக காணப்படுவதால் முகமூடிகளை முறையாக அணிந்து செயற்படுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.