பொதுவாக போர் அல்லது ஆபத்து காலங்களில்தான் நிலத்துக்கு அடியில் பதுங்கு குழிகள் தோண்டி அங்கே வாழ்வார்கள். ஆனால் வடக்கு ஆபிரிக்க நாடான துனிசியாவில் மட்மதா என்னும் நகரத்தில் உள்ள மக்கள் வாழ்வதே நிலத்துக்கு அடியில்தான். அரபு மொழி பேசும் இந்த பெர்பர் இன மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள்.
இவர்கள் அரேபியாவிலிருந்து துனிசியா நாட்டுக்கு இடம்பெயர்ந்து வந்தபோது, மட்மதா நகரத்தின் வறண்ட நிலத்தினால் வெப்பத்தால் வாழ முடியாத ஒரு சூழ்நிலை நிலவியது. இதனால் இங்குள்ள நிலத்தின் அடியில் மண்ணைத் தோண்டி குழிகள் அமைத்து அதற்குள் மக்கள் வாழத் தொடங்கியுள்ளனர்.முதலில் எளிய கைக்கருவிகளினால் ஆழமான வட்டக் குழியைத் தோண்டி வீடுகள் கட்டுகின்றனர். பின்னர் குகையின் விளிம்புகளை சுற்றி தோண்டி நிலத்தடி அறைகளை உருவாக்கி வீட்டின் அமைப்பை செய்கின்றனர்.
இந்த வீட்டின் ஒவ்வொரு கொல்லைப்புறமும் ஒரு முற்றத்துடன் இணைகிறது. இதன் மூலம் வீட்டுக்கு வெளியிலிருந்து காற்றைக் கொண்டு வரமுடியும்.
இந்த ட்ரோக்ளோடைட் கட்டுமானம் பகல் வேளைகளில் வெப்பத்திலிருந்து பாதுகாத்துள்ளது. துனிசியாவின் ஜனாதிபதி நாட்டை நவீனமாயமாக்க முயன்றபோது மட்மதா நகர மக்கள் பல நவீன வசதிகளைப் பெற்றனர்.