மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த சந்தேக நபரை நேற்று (16.01.2024) மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் தங்கியிருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பிரதேச பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.
இதன் போது சந்தேக நபரின் வீட்டில் இருந்து 520 சட்டவிரோத போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இந்தியாவில் இருந்து கடல் வழியாகவே போதை மாத்திரைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பிலான விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.