கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மேக்கிங் காட்சிகளை “கேப்டன் மில்லரின் பயணம்” என்ற தலைப்பில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் சுமேஷ் மூர், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அண்மையில் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றதுடன், நாளை கேப்டன் மில்லர் திரைப்படம் திரையில் வெளியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.