புறப்பட தயாராக இருந்த விமானத்தில் இருந்து கீழே குதித்த பயணியால் பரபரப்பு

keerthi
0

 


கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் துபாய்க்கு புறப்பட ஏர் கனடா விமானம் தயாராக இருந்தது. 

பயணிகள் அனைவரும் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது இருக்கையில் அமராமல் நின்று கொண்டிருந்தார்.

மேலும்  திடீரென்று அவர் விமானத்தின் கேபின் கதவை திறந்து கீழே குதித்தார். இந்த வாலிபர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து குதித்ததில் காயமடைந்தார்.

போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் விமானத்தில் இருந்து எதற்காக கீழே குதித்தார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

  அத்தோடு   அந்த வாலிபரின் பெயர், மற்ற விவரங்களை வெளியிடாத போலீசார், அவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்தும் தெரிவிக்கவில்லை. இதனால் துபாய்க்குச் செல்லும் விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top