நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் ஜப்பானால் அனுப்பப்பட்ட “மூன் ஸ்னைப்பர்” விண்கலம் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
எனினும் இதையடுத்து விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கிய 5 ஆவது நாடாக ஜப்பான் இடம்பிடித்தது.
இதற்குமுன்னர் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய நாடுகளாக ஐக்கிய அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.
இவ்வாறுஇருக்கையில், ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிலையம், Smart Lander for Investigating Moon என்ற திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி மோசமான வானிலை காரணமாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், H-IIA ரொக்கெட் செப்டம்பர் மாதம் ஜப்பானின் தெற்கு தீவான தனேகாஷிமாவிலிருந்து லேண்டரை சுமந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.