பருத்தித்துறை பஸ் நிலையத்தில் வைத்து தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த பஸ் உரிமையாளரும் சாரதியுமான தேவகுமார் என்ற குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த சாரதி மீது சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.