சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அயலான்' படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. பொங்கல் ரிலீசாக வெளியான இப்படத்தினை 'இன்று நேற்று நாளை' பட பிரபலம் ராம்குமார் இயக்கியிருந்தார். இதனையடுத்து தற்போது தனது 21 வது படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்கிறார் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் டான்ஸ், மிமிக்ரி, தொகுப்பாளர் பன்முகத்திறமைகளை வெளிப்படுத்தி பிரபலமாக திகழ்ந்தவர் சிவகார்த்திகேயன். டிவியில் கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து சினிமாவில் நுழைந்த எஸ்கே, தற்போது தனக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளம் கொண்டு பிசியான நடிகராக வலம் வருகிறார்.