கடமையிலிருக்கும் போது கஞ்சா போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஹபராதுவ பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் (PC) பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் தலைமைப் பரிசோதகரால் (CI) கைது செய்யப்பட்டு, கராப்பிட்டிய மருத்துவமனையின் நீதிசட்டவைத்திய மருத்துவ அதிகாரி (JMO) முன் ஆஜர்படுத்தப்பட்lதுடன், சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிள் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று வைத்திய அறிக்கைகள் உறுதிப்படுத்தின .
குறித்த அறிக்கையின் அடிப்படையில் காலி பொலிஸ் அத்தியட்சகர் சனத் அமரசிங்கவினால் குறித்த கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டார்.